அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..!

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் வால்பாறை கிளை செயலாளர் செந்துர்பாண்டி தலைமையில் தலைவர் முத்துக்குமார் பொருளாளர் சேகர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணா தொழிற்சங்க பேரவையின் கோவை மண்டல செயலாளர் செல்வராஜ், மண்டல தலைவர் வி.பி.ரமேஷ், மண்டல பொருளாளர் பி.ரங்கராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உறுப்பினர்கள் நிர்வாகிகளுடன் இணக்கமாக செயல்பட்டு திமுக ஆட்சியில் இழைக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுக்கவும் ஒட்டு மொத்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கழக பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் தலைமையிலான ஆட்சி மலர ஒருமித்த கருத்தோடு அனைவரும் பாடுபடவேண்டும் என்றும் அனைவரும் உறுதியேற்றனர். தனியார் அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கிளை நிர்வாகிகளும் உறுப்பினர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்..