அடுத்தவர் வீட்டை குத்தகைக்கு காட்டி ரூ 27 லட்சம் மோசடி.

கோவை அருகே உள்ள வடவள்ளி அருண் நகர் 5 – வதுகிராசை சேர்ந்தவர் வெங்கடேஷ் ( வயது 30 ) இவர் ஓ.எல்.எக்ஸ் ஆப் மூலம் குத்தகைக்கு வீடு தேடிக் கொண்டிருந்தார். இவரிடம் ராஜசேகர் என்பவர் அறிமுகமானார்.அவர் மருதம் நகரில் தனது வீடு குத்தகை க்கு இருப்ப தாக கூறி வெங்கடேஷிடம் ரூ.12 லட்சம் வாங்கினாராம்.இதே போலசசிகுமார் என்பவரிடமும்வீடு குத்தகைக்கு இருப்பதாக கூறி ரூ. 15 லட்சம் வாங்கினாராம்.இந்த நிலையில் இவர்கள் அந்த வீட்டை போய் பார்த்த போது இது ஆனந்தி என்பவரது வீடு என்பது தெரிய வந்தது.மற்றொருவரின் வீட்டைக் காட்டி ரூ27 லட்சம் மோசடி செய்து ள்ளார்.இது தொடர்பாக வெங்கடேஷ் வடவள்ளி போலீசில் புகார் செய்துள்ளார்.சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வழக்கு பதிவு செய்து ராஜசேகர் என்பவரை தேடி வருகிறார்..