சென்னையிலிருந்து செல்லும் பயணிகள் தங்கள் வழித்தடத்திற்கு ஏற்பப் பின்வரும் நிலையங்களைப் பயன்படுத்தலாம்:
கிளாம்பாக்கம் (KCBT)-திருச்சி, மதுரை, சேலம், கோவை, கும்பகோணம் மற்றும் தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் இங்கிருந்து புறப்படும்.
கோயம்பேடு (CMBT)- வேலூர், காஞ்சிபுரம், பெங்களூரு, திருத்தணி மற்றும் ஈ.சி.ஆர் (ECR) வழித்தடப் பேருந்துகள் இங்கிருந்து இயங்கும்.
மாதவரம் -ஆந்திர மாநில வழித்தடங்கள் மற்றும் பொன்னேரி வழியாகச் செல்லும் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படும்.
கிளாம்பாக்கத்தில் 10 மையங்களும், கோயம்பேட்டில் ஒரு மையமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும்.
பேருந்து இயக்கம் குறித்த புகார்களுக்கு 94450 14436 என்ற எண்ணையும், ஆம்னி பேருந்து கூடுதல் கட்டணப் புகார்களுக்கு 1800 425 6151 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.
கோயம்பேட்டிலிருந்து மற்ற பேருந்து நிலையங்களுக்குச் செல்ல மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் (MTC) இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும்.
பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க அரசு அறிவித்துள்ள முன்பதிவு வசதியைப் பயன்படுத்திப் பாதுகாப்பாகப் பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.








