கோவை ஜூலை 2 சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் காவலாளி அஜித் குமார் போலீஸ்காரர்களால் சித்ரவதை செய்யப்பட்டார். இதில் அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீஸ்காரர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் போலீஸ் நிலையங்களில் இது போன்ற சம்பவம் நடக்கக்கூடாது போலீசார் கண்ணியமாக நடக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது .இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் கூறியதாவது:- கோவை மாநகர பகுதியில் மொத்தம் 20 காவல் நிலையங்கள், 4 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், 2 போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையங்கள் உள்ளன .போலீஸ் நிலையங்களில் வழக்கு தொடர்பாக கைது செய்யப்படும் நபர்களை சரியான முறையில் விசாரித்து உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். குற்றவழக்குகளில் கைது செய்யப்படும் நபர்கள் யாரையும் இரவு 7 மணிக்கு மேல் காவல் நிலையத்தில் வைத்திருக்கக் கூடாது .இது தொடர்பாக ஏதாவது புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0