கோவை செப்டம்பர் 26 கோவை அருகே வடவள்ளி சிறுவாணி ரோட்டில் மருத்துவக் கழிவு குப்பைகளை கொட்டியதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய பறக்கும் படை பொறியாளர் பியூலா வடவள்ளி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.அங்குள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது.அதன் மூலம் அந்த மருத்துவ கழிவுகளை கொட்டியது ஸ்ரீராம் ஏஜென்சி என்பது தெரியவந்தது .இது தொடர்பாக டிரைவர் மணிகண்டன் மற்றும் அந்த ஏஜென்சி ,அதன் உரிமையாளர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0





