கோவை அக் 29கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன்உத்தரவின் பேரில்மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கஞ்சா வேட்டை நடத்தி வருகிறார்கள்.இந்த நிலையில் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்துக்கு ஒரு இடத்தில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக ரகசிய தகவல்கிடைத்தது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் சின்னமத்தம்பாளையம் – கண்ணார்பாளையம்ரோட்டில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கஞ்சாகடத்தி வந்ததாக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பஞ்சனன் பலதா மகன் பலராம் பலதா(வயது 35)என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 3 கிலோ 200 கிராம் கஞ்சாபறிமுதல்செய்யப்பட்டது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0





