கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு மீண்டும், மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.

கோவை செப்டம்பர் 3 கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுகிறது. கடந்த மாதம் 26-ஆம் தேதி மற்றும் 27ஆம் தேதி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது .இந்த நிலையில் நேற்று காலை கோவை கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வழக்கம் போல பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மீண்டும் ஒரு இ-மெயில் வந்தது அதில் கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் வகையில் வாசகங்கள் இருந்தன. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அதிகாரிகளுக்கும் ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். வெடிகுண்டு கண்டுபிடிப்பு நிபுணர்கள்மோப்ப நாய் உதவியுடன் அலுவலகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அனைத்து கட்டிடங்களிலும் ஒவ்வொரு அறையாக சென்று சோதனை மேற்கொண்டனர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. இதனால் இ-மெயிலில் வந்த மிரட்டல் வெறும்புரளி என்பது தெரியவந்தது.இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது, :- வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் அசாமிகளை கண்டறிய தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் .அந்த நபர்களை கண்டுபிடிக்கும் போது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். என்றனர.