பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகளை கூவி விற்ற முதியவர் கைது

கோவை செப்டம்பர் 8 பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீஸ் .சப் இன்ஸ்பெக்டர் தங்கதுரை நேற்று பொள்ளாச்சி பழைய பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகளை ஒரு முதியவர் கூவி விற்பனை செய்தததுகண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் பொள்ளாச்சி, குமரன் நகர், அழகப்பா லேஅவுட் சேர்ந்த நஜுபூர் ரகுமான் ( வயது 70 )என்பது தெரிய வந்தது. இவர்களிடமிருந்து 60 லாட்டரி டிக்கெட்டுகள் ப செய்யப்பட்டன மேலும் விசாரணை நடந்து வருகிறது.