கோவை அக்29 கோவை துடியலூர் அருகே உள்ள தாளியூரைச் சேர்ந்தவர் கவி சரவணகுமார் ( வயது 54)அ.தி.மு.க. பிரமுகர் இவர் பன்னீர் மடை ஊராட்சி தலைவராகவும், மாவட்ட கவுன்சிலராகவும் பதவி வகித்து வந்துள்ளார் .இவரது மனைவி மகேஸ்வரி ( வயது 45) இவர்களுக்கு சஞ்சய் ( வயது 21) என்ற மகனும் நேத்ரா ( வயது 15 )என்ற மகளும் உள்ளனர். இதில் சஞ்சய் இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டும், மேத்ரா ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக தெரிகிறது இதனால் மகேஸ்வரி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார் .கவி சரவணகுமார் அவ்வப்போது வீட்டுக்கு வந்து தனது குழந்தைகளை பார்த்துவிட்டு செல்வார் .நேற்று காலையில் கவி சரவணகுமார் தனது வீட்டுக்கு வந்து குழந்தைகளை பார்த்து விட்டு சென்றார். இதை யடுத்து சஞ்சய் கல்லூரிக்கும் நேத்ரா பள்ளிக்கும் சென்று விட்டனர் மகேஷ்வரி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார் இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் வடவள்ளி போலீஸ் நிலையத்திற்குகத்தியுடன் ஒருவர் வந்தார் .அவர் தன்னை தாளியூரைசேர்ந்த சுரேஷ் (வயது 45) என்றும்,தாளியூரை சேர்ந்த சேர்ந்த அதிமுக பிரமுகரான கவி சரவணகுமாரின்வீட்டில் கார் டிரைவராக வேலை பார்த்து வருவதாகவும், அவரது மனைவி மகேஸ்வரியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டதாகவும் கூறி சரண அடைந்தார் .அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் இது குறித்து தடாகம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். அங்கு வீட்டுக்குள் மகேஸ்வரி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். உடனே போலீசார் அவரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தடாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைநடத்தி வருகிறார்கள். மகேஸ்வரி கொலை செய்யப்பட்ட தகவல்அறிந்ததும் அந்த பகுதி மக்கள் அவரது வீட்டின் முன்பு திரண்டனர் .இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது .இது குறித்து போலீசார் கூறும் போது மகேஸ்வரியை கொலை செய்ததாக சரண் அடைந்த சுரேஷ், கவி சரவணக்குமாரின் வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக கார் டிரைவர் வேலை பார்த்து வருகிறார். அவர் எதற்காக மகேஸ்வரியை கொலை செய்தார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது அதிமுக பிரமுகரின் மனைவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0





