ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி வீட்டில் கொள்ளை முயற்சி.

கோவை ஜூலை 22 கோவை சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள சண்முகா நகரில் வசிப்பவர் குமார் (வயது 72) இவர் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் ( பி. எப்) உதவி ஆணையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் .இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்று இருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளேசென்று பார்த்தபோது வீட்டில் எந்த பொருட்களும் திருட்டுப் போகவில்லை. ம்ர்ம ஆசாமிகள்திருட முயற்சி செய்தது தெரிய வந்தது .இது குறித்த அவர் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.