ஆஸ்திரேலியாவின் 32-வது பிரதமராக வரலாற்றுச் சிறப்புமிக்க முறையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தோணி அல்பானீஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.அப்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான யுத்திசார்ந்த கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை பிரதமர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,கடந்த ஐந்து ஆண்டுகளில், விரிவான கூட்டு நடவடிக்கைகள் மூலம் பல்வேறு துறைகளில் வலுவான ஒத்துழைப்பு வளர்ச்சியடைந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.இருதரப்பு உறவுகளை உறுதிப்படுத்துவதில் ஆர்வமிக்க இந்திய வம்சாவளியினர் ஆற்றிய பங்களிப்பை பகிர்ந்து கொண்டனர்.பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். மேலும் சுதந்திரமான, வெளிப்படையான விதிகள் சார்ந்து பணியாற்றுவதற்கும் மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியை மேம்படுத்துவதில் இணைந்து பணியாற்றுவதற்கான உறுதிப்பாட்டை வலியுறுத்தினர்.இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள ஆண்டு உச்சி மாநாடு மற்றும் குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் அல்பானீஸுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0