கோவை செல்வபுரம்,வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் அப்துல் ஜாபர் இவரது மகன் ஜஸ்கீர் பாட்ஷா (வயது 24 )நேற்று இரவில் இவரும் செல்வபுரம், ஐ.யூ. டிபி காலனியை சேர்ந்த இஸ்மாயில் மகன் லிஜாஸ் ( வயது 23)என்பவரு ஒரே பைக்கில் ரேஸ்கோர்ஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர் ஜஸ்கீர் பாட்சா பைக்கை ஓட்டினார்.தாமஸ் பார்க், சதன் இந்தியா மில் அசோசியேசன்அருகே சென்றபோது அங்கு ரோடு ஓரம் நின்று கொண்டிருந்த கார் மீது பைக் மோதியது .இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.பின்னால் இருந்த லிஜாஸ் அதே இடத்தில் இறந்தார் .பைக் ஓட்டி வந்த ஜஸ்கீர் பாட்சா படுகாயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்துபுலனாய்வுபோலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் தங்கமணி சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார் .இது தொடர்பாக பைக் ஓட்டி வந்த ஜஸ்கீர் பாட்ஷா (வயது 24) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0