நீலகிரியில் பாஜக தேர்தல் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பயிலரங்கம் கூட்டம்..!

நீலகிரி மாவட்ட பாஜக சார்பின் உதகை சேரிங் கிராஸ் பகுதியில் உள்ள தேவாங்கர் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சி, தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் சட்டமன்ற தொகுதி பயிலரங்கம் கூட்டம் உதகை சரிங்க கிராஸ் பகுதியில் உள்ள தேவாங்கர் திருமண மண்டபத்தில் நீலகிரி மாவட்ட தலைவர் தர்மன் உதகை  தலைமையில் உதகை சட்டமன்ற பொறுப்பாளர் போஜராஜ், இணை பொறுப்பாளர் பாபு, மாநில செயற்குழு உறுப்பினர் ராமன் ஆகியோர் முன்னிலையில் உதகை சட்டமன்றத் தொகுதி பயிலரங்கம் கூட்டம் துவங்கியது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில வழக்கறிஞர்கள் பிரிவு செயலாளர் குமரன், மாவட்ட பொருளாளர் வெங்கடேஷ், உதகை நகரத் தலைவர் ரித் கார்த்திக், தலைமை செயற்குழு உறுப்பினர் என் சுரேஷ் மற்றும் வாக்குச்சாவடி பி.எல்.ஏ 2 முகவர்கள் கலந்து கொண்டனர். நடைபெற்ற கூட்டத்தில் நீலகிரி மாவட்டத் தலைவர் தர்மன் அவர்கள் சிறப்புரையாற்றி வருகிற 2026 தேர்தலுக்கான வாக்குச் சவாடி நிலை முகவர்களுக்கு சிறப்பு ஆலோசனை வழங்கினார். கூட்டம் நிறைவாக உதகை நகர தலைவர் ரித் கார்த்திக் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கூட்டம் நிறைவு பெற்றது..