பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருந்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 26- முறை வெடிகுண்டு வந்துள்ளது. இந்த நிலையில் கோவை உப்பிப்பாளையம் சிக்னல் அருகே பழைய பாஸ்போர்ட் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக இ -மெயிலுக்கு நேற்று ஒரு தகவல் வந்தது. அதில் அலுவலகத்தில் சக்தி வாய்ந்த ஆர். டி .எஸ் வெடிகுண்டுகள் வைகப்பட்டுள்ளது. அது இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து கோவை மாநகர வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சென்று அலுவலகம் முழுவதும் சோதனை செய்தனர் எந்த பகுதியில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை .வெறும் புரளி என்பது தெரிய வந்தது .இது போன்று அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மீரட்டல் விடுக்கும் நபர்கள் யார்? என்பது குறித்து கண்டறிய முடியவில்லை .எனவே நவீன தொழில்நுட்ப உதவியுடன் இது போன்ற செயலில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது..