கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.

போலீசார் அதிரடி சோதனை.கோவை ஜூலை 3 கோவை ரயில் நிலையம் ரோட்டில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று ஒரு மர்ம கடிதம் வந்தது. அந்த கடிதம் தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த முத்துக்குமாரசாமி என்பவரது பெயரில் எழுதபட்டிருந்தது.அந்த கடிதத்தை கலெக்டர் அலுவலக ஊழியர்கள் பிரித்து படித்தனர் .அந்த கடிதத்தில் கலெக்டர் அலுவலகத்திற்குவெடிகுண்டு வைப்பதற்கு சிலர் திட்டமிடுவதாகவும், அவர்கள் குறித்த தகவல் தனக்குத் தெரியும் என்றும் தனது உயிருக்கு பாதுகாப்பு அளித்தால் அவர்கள் குறித்த விவரத்தை தெரிவிப்பேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக உயர் அதிகாரிளுக்கு தகவல் தெரிவித்தனர்.ரேஸ் கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது..இதை யடுத்து இன்ஸ்பெக்டர் கந்தசாமி மற்றும் போலீசார் விரைந்து வந்து கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர் . மேலும் மோப்ப நாயுடன், “மெட்டல் டிடைக்டர் ” கருவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து கலெக்டர் அலுவலகம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால் அது வெறும் புரளி என்பது தெரிய வந்தது..இதை யடுத்து போலீசார் செங்கோட்டையை சேர்ந்த முத்துக்குமாரசாமி என்பவரை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினர் .இதில் அவர் தான் இந்த கடிதத்தை எழுத வில்லை என்றும் தனது பெயரில் வேறு யாரோ எழுதியிருப்பதாகவும் தெரிவித்தார். அந்த கடிதம் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் இருந்து தபால் மூலம் அனுப்பப்பட்டிருந்தது. போலீஸ்விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் கடிதம் எழுதிய நபரை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்துவிசாரணை நடத்தி வருகின்றனர். கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு கடந்த மே மாதம் “இ-மெயில் ” மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. தற்போது 2-வது முறையாக மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.