நடைபாதையில் கழிவு நீரை கொட்டியதால் மோதல் : அண்ணன் – தங்கை படுகாயம்.தாய் – மகன் கைது.

கோவை மே 10 கோவை பக்கம் உள்ள வேடப்பட்டி , வன்னியம்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் முருகன் .இவரது மகள் ரேஷ்மா ( வயது 26 )இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் சிலம்பரசன் ( வயது 29) என்பவருக்கும் பொது நடைபாதையில் கழிவுநீரை ஊற்றுவதில் தகராறு இருந்து வந்தது.இந்த நிலையில் சம்பவத்தன்று ரேஷ்மா வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலம்பரசன் அவரது அம்மா நிர்மலா தேவி (வயது) 48 ஆகியோர் சேர்ந்து ரேஷ்மாவையும், அவரது அண்ணன் ராஜேசையும் தடியால் தாக்கினார்கள். இருவரும் படுகாயம் அடைந்தனர்.இவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து ரேஷ்மா தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்கு பதிவு செய்துபக்கத்து வீட்டில் வசிக்கும் சிலம்பரசன் ( வயது 29) அவரது தாயார் நிர்மலா தேவி ( வயது48) ஆகியோரை கைது செய்தார்.