20 கிலோ குட்காவுடன் வட மாநில வியாபாரி கைது

கோவை ஆகஸ்ட் 9 கோவை காட்டூர் காவல் நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை நேற்று காந்திபுரம் அவினாசி ரோடு மேம்பாலம் பகுதியில்நின்று கொண்டிருந்த ஒருவரைசந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 20 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட்கா) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பர்வத்சிங் (வயது 58) என்பது தெரியவந்தது. இவர் தற்போது உட்பிலிபாளையம், கடலைக் கார தெருவில் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு.கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.