கார் கண்ணாடி உடைப்பு..!

கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் கணேச மூர்த்தி. இவர் அங்குள்ள பழனி ஆண்டவர் கோவில் அருகே தனது காரை நிறுத்தி இருந்தார். இரவில் அந்த வழியாக சென்ற 4 பேர் இந்த காரின் கண்ணாடியை உடைத்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கார் கண்ணாடியை உடைத்தது போத்தனூரை சேர்ந்த பெயிண்டர் யாசர், குனியமுத்தூர் பிரதீஸ் மற்றும் 2 சிறுவர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்களில் 2 சிறுவர்கள் மட்டும் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.