வால்பாறையில் இ- பாஸ் நடைமுறையை ஒத்திவைக்க தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரம ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்

கோவை மாவட்டம் வால்பாறையில் நடைபெற்ற விவசாய தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ஜே.பி.ஆர்.இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் எம்.விக்கிரமராஜா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது நவம்பர் 1 ஆம் தேதி முதல் வால்பாறை பகுதிக்கு செல்ல இ- பாஸ் நடைமுறைக்கு வருவதாக கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில் பொது மக்கள், நோயாளிகள், தொழிலாளர்கள், தேயிலைத் தொழில் போக்குவரத்து ஆகியவற்றை கருத்தில் கொண்டு இ- பாஸ் நடைமுறையை நிறுத்தி வைக்க தமிழக முதல்வரை நேரில் சந்தித்து முறையிட உள்ளதாகவும், படகு இல்லம், பூங்கா ஆகியவை செயல்படாமல் இருப்பதாகவும் அதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உரிய தீர்வு காணவேண்டும், மார்கெட் பகுதியை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ள நகராட்சி நிர்வாகம் அங்குள்ள 250 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பாதிக்கப்படாத வகையில் புதுப்பிக்கும் நடவடிக்கையின் போது மாற்று இடம் வழங்கவும் புதுப்பிக்கப்பட்டவுடன் உரியவர்களுக்கு வாடகையை அதிகப்படுத்தாமல் வழங்கவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார் இந்நிகழ்ச்சியின் போது மண்டல தலைவர் சந்திர சேகர், மாவட்ட தலைவர் சக்திவேல், மாவட்ட செயலர் வின்சென்ட், பொருளர் மாரிமுத்து, வால்பாறை நிர்வாகிகள் ஜெபராஜ், ஷாஜிமாலிகல், ஜேசுதாசன், ராஜா, சுலைமான், மோகன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்