பஸ் – ஆட்டோ மோதல் : டிரைவர் சாவு

கோவை செப்டம்பர் 8 கோவை கணபதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 50) ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 4 – ந் தேதி மாலையில் தனது ஆட்டோவில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிர்புறம் உள்ள ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த தனியார் பஸ் , ஆட்டோ மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பிரேம் குமார் சிகிச்சைக்காகஅரசு மருத்துவ மருத்துவமனை சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று இறந்தார். இது குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.