ஹிந்து‌ ஆலயப் பாதுகாப்பு இயக்கம் கோவை மாநகர் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா

உழவாரப்பணி 28.09.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணியளவில் 108 பால் குடம், தீர்த்த குடம், பேழை சீர்வரிசை கோட்டை அகிலாண்டேஸ்வரி உடனமர் அருள்மிகு ஶ்ரீ சங்கமேஸ்வரர் கோவிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க எடுத்து வந்து அருள்மிகு கோனியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலை 10.00 மணியளவில் ஆன்மீக சொற்பொழிவு கோவை காமாட்சி புரி ஆதினம் 51வது சக்தி பீடம் மகா சமஸ்தானம் இரண்டாம் குருமகா சந்நிதானம் சாக்த ஶ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்கள். சிறப்பு விருந்தினர்களாக லட்சுமணன் தலைவர் மற்றும் அறங்காவலர் கோனியம்மன் கோவில், ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் நிறுவனர் சேலம் ராமசாமி அய்யா அவர்களின் மகன் திரு. ரா. பாலசுப்ரமணியம் திரு.முத்துசாமி ஜி ஆசிரியர் புண்ணிய பூமி மாத இதழ் அவர்களும் திரு.கிருஷ்ணராஜ் ஜி ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் மாநில அமைப்பு செயலாளர் அவர்களும் திரு.சகஸ்ராம் ஜி ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் கோவை மாநகர தலைவர் அவர்கள் நன்றியுரை வழங்கினார். அருள்மிகு கோனியம்மன் கோவிலில் நடைபெற்ற 25 ம் ஆண்டு வெள்ளிவிழா உழவாரப் பணி சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து கிளை கமிட்டி அமைப்பாளர்கள், திருத்தொண்டர்கள் அனைவருக்கும் கோனியம்மன் கோவில் கிளை கமிட்டி சார்பாக மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டு அனைவருக்கும் அன்னம் பாலிப்பு நடைபெற்றது