கோவை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையொட்டி ரூ. 32 கோடிக்கு பட்டாசு விற்பனை

கோவை அக்டோபர் 22.கோவை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை பட்டாசு விற்பனை குறித்து பட்டாசு வியாபாரிகள் கூறியதாவது :கோவை மாவட்டத்தில் மாநகரில் 350 பட்டாசு கடைகள் ,புறநகரில் 450 பட்டாசு கடைகள் என மொத்தம் 800 பட்டாசு கடைகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. இது கடந்த ஆண்டை விட குறைவு. இதில் சிறிய கடைகளுக்கு ரூ 3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையும், பெரிய கடைகளுக்கு ரூ.10 லட்சம் முதல் 15 லட்சம் வரையும் என கடந்த 11 நாட்களாக வியாபாரம் நடந்து வந்தது. தீபாவளிக்கு 4 நாட்களுக்கு முன்பு விற்பனை சூடு பிடித்தது .தீபாவளியை யொட்டி இந்த ஆண்டு ரூ.32 கோடிக்கு பட்டாசுகள் விற்பனையாகி உள்ளது .இது நாங்கள் எதிர்பார்த்ததில் 85 சதவீத விற்பனையாகும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.