வால்பாறையில் மத்திய அரசின் தொழிலாளர்கள் விரோத போக்கை கண்டித்து மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் அறிவிப்பை தொடர்ந்து வால்பாறையில் உள்ள மத்திய தொழிற்சங்கத்தினர் மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கான சட்டத்திருத்த தொகுப்பை திரும்பப்பெற வலியுறுத்தியும், குறைந்த பட்சம் ஊதியமான ரூ.26 ஆயிரத்தை நிர்ணயம் செய்யவும், பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு தாரை வார்காதே உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர் வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எல்பிஎப், ஐஎன்டியூசி,ஏஐடியூசி, எம்எல்எப், சிஐடியூசி உள்ளிட்ட பல்வேறு மத்திய தொழிற்சங்க நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்ட நிலையில் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் வழக்கம் போல் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது