விஷம் குடித்து டிரைவர் தற்கொலை

கோவை செப்டம்பர் 11 தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி,கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் நாராயணன் ( வயது 44 )கோவை சாய்பாபா காலனி அழகேசன் ரோட்டில் அறை எடுத்து தங்கியிருந்து டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் தங்கியிருந்த அறையில் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது.சப் இன்ஸ்பெக்டர் தீபா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.