கோவை மில்லில் பயங்கர தீ விபத்து : ரூ 20 லட்சம்பஞ்சு எரிந்து சேதம்

கோவை செப்டம்பர் 9 கோவை பீளமேடு, தண்ணீர் பந்தல் ரோட்டில் உள்ள “டைட்டல் பார்க்” பின்புறம்தனியாருக்கு சொந்தமான நூல் தயாரிக்கும் மில் உள்ளது.இந்த மில்லில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த மில்லின் ஒரு பகுதியில் குடோன் உள்ளது .அதில் நூல்கள் மற்றும் பஞ்சுகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் சிறிது நேரம் மட்டுமே இங்கு வேலை நடந்தது. பின்னர் தொழிலாளர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர்.இந்த நிலையில் நேற்று அதிகாலை 1 -30 மணி அளவில் மில் குடோனில் இருந்து புகை வெளியேறியது. இதை பார்த்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீளமேடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். பீளமேடு,கணபதி,கோவை தெற்கு பகுதியில் உள்ள தீயணைப்புநிலையங்களில் இருந்து 3 வாகனங்கள் மற்றும் 25க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பப இடத்துக்கு விரைந்து சென்றனர். அந்த குடோனில் பஞ்சுஅதிகமாக இருந்ததால் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். ஆனால் குடோனில் பஞ்சுகள் மற்றும் நூல்கள் அதிகமாக இருந்தால் அவை தொடர்ந்து எரிந்து கொண்டிருந்ததால் அணைக்க முடியவில்லை. 5மணி நேரம் போராடி காலை 6:30 மணிக்கு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் ஏராளமான பஞ்சுகள் நூல்கள் எரிந்து சாம்பலானது. சேத மதிப்பு ரூ 20 லட்சம்இருக்கும் என்று கூறப்படுகிறது..இதுகுறித்து அந்த மில்லின் உரிமையாளர் யுகேந்திரா அகர்வால் பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது