போக்சோ வழக்கில் கைதாகி ஜாமினில் வந்தவர் தூக்கு போட்டு தற்கொலை

கோவை செப்டம்பர் 3 கோவை சங்கனூர், காந்திநகர் ,தண்டல் ராமன் வீதியைச் சேர்ந்தவர் மொட்டையன் ( வயது 52 )கட்டிட வேலை செய்து வந்தார் .இவர் 20-3 – 2025 அன்று கோவை மத்திய பகுதி அனைத்துபெண்கள் காவல் நிலைய போலீசாரால் போக் சோ வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார்.. 30 – 7 – 2025 அன்று ஜாமினில் வெளியே வந்தார்.இந்த நிலையில் மத்திய பகுதி அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் தினசரி கையெழுத்திட்டு வந்தார். மன அழுத்தத்துடன் இருந்து வந்த மொட்டையன்நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் நைலான் கயிற்றை மின்விசிறியில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி ருக்கு கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்