கோவைசெப்டம்பர் 9 கோவை சாய்பாபா காலனி போலீஸ் சப். இன்ஸ்பெக்டர் தீபா நேற்று கே.கே. புதூர் ரோட்டில் ரோந்து சுற்றிவந்தார். அப்போதுஅங்கு சந்தேகப்படும் படிநின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவைகள்பறிமுதல் செய்யப்பட்டது.இந்த கஞ்சாவை சிகரெட்டில் அடைத்து அந்த பகுதியில் அறை எடுத்து தங்கியிருக்கும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததாக விசாரணையில் தெரியவந்தது .இதை யடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள்பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நசீர் மன்சூரி (வயது 29) தேவலால் (வயது 28 )மற்றும் வெங்கிட்டாபுரத்தைச் சேர்ந்த கஜேந்திரன் ( வயது 22) என்பது தெரிய வந்தது .3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0