கோவை மே 12 நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை துறை சார்பில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது .இந்த ஆண்டு கோடை விழா கடந்த 3-ஆம் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி 3 நாட்கள் நடைபெற்றது. ஊட்டி ரோஜா பூங்காவில் நடைபெற்று வரும் ரோஜா கண்காட்சி இன்று (திங்கள் கிழமை) நிறைவடைகிறது. இதை யடுத்து சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஊட்டி மலர் கண்காட்சி வருகிற 15-ஆம் தேதி தொடங்கி 11 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மலர் கண்காட்சியை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 5 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று ஊட்டிக்கு வருகை புரிந்துள்ளார். .அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 11 மணிக்கு கோவை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது அமைச்சர்கள் முத்துசாமி,சாமிநாதன்,கயல்விழி செல்வராஜ்,முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி,கணபதி ராஜ்குமார் எம்.பி.கோவை மாநகர மாவட்ட திமு.க செயலாளர் நா. கார்த்திக் ( முன்னாள் எம் ..எல். ஏ ),மேயர் ரங்கநாயகி ,மாவட்டச் செயலாளர்கள் தொ. அ. ரவி ,தளபதி முருகேசன்,மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட பலர் வரவேற்றனர். அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் ஊட்டிக்கு புறப்பட்டு சென்றார்.விமான நிலையம்,மற்றும் வழி நெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஊட்டிக்கு செல்லும் வழியில் கோத்தகிரி கட்டப்பட்டு உள்ளிட்ட இடங்களில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஊட்டியில் உள்ள தமிழக மாளிகையில் ஓய்வெடுக்கிறார். பின்னர் பொதுமக்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். மேலும் பழங்குடியினர் மக்களை சந்தித்து பேச உள்ளார் .15 – ஆம் தேதி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127 வது மலர் கண்காட்சி தொடங்கி வைத்து மலர் அலங்காரங்களை பார்வையிடுகிறார்.. இதையடுத்து 16-ஆம் தேதி 5 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்து சென்னை திரும்புகிறார். முதலமைச்சர் வருகையையொட்டி மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடு நடவடிக்கைகள் செய்து வருகிறது.. முதலமைச்சர் வருகையை யொட்டி கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. செந்தில் குமார்,மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர்ஆகியோர் உத்தரவின் பேரில்1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0