வெடிகுண்டு மிரட்டல்!சைனா தீபாவளி பட்டாசால் பரபரப்பு !

கோவை, கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று 13 – வது முறையாக வந்த வெடிகுண்டு மிரட்டல் : சாய்பாபா காலனியில் குப்பைத் தொட்டியில் கிடந்த சைனா தீபாவளி பட்டாசால் பரபரப்பு !

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமையொட்டி பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் கலெக்டர் பவன் குமார் தலைமையில் நடந்தது. பொதுமக்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து கலெக்டரிடம் மனுக்களை அளித்துக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில் இன்று காலை கலெக்டர் அலுவலக முகவரிக்கு 13 – அது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்து உள்ளது. இ – மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலை அலுவலக ஊழியர்கள் பார்த்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் இருந்து கோவை வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் மெண்டல் டிடெக்டர் மற்றும் மோப்பநாய் மூலம் சென்று சோதனை செய்தனர்.இந்த முறையும் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு இடையே சாய்பாபா காலனியில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு கிடந்த சைனா தீபாவளி பட்டாசு பொட்டலத்தை பார்த்த சிலர் கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நாட்டு வெடி பொருட்கள் கிடப்பதாக தகவல் கொடுத்தனர்.

வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு போலீசார்  சென்று பார்த்த போது, அவை சைனா மாடல் தீபாவளி பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டு வீணாக போடப்பட்டவை என தெரியவந்தது. இதை குப்பைத்தொட்டியில் போட்டு சென்றவர்கள் யார் ? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.