குடிபோதையில் பாரில் மோதல் :தொழிலாளி குத்தி கொலை

டாக்சி டிரைவர் உட்பட 2 பேர் கைது கோவை ஜூலை 8 கோவை மதுக்கரை அருகே உள்ள போடிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் ( வயது 33 )கட்டிட தொழிலாளி. ஜெயக்குமார் நேற்று முன் தினம் தனது நண்பர் ஜீவன் பிரசாத் மற்றும் நண்பர்களுடன் ஆத்து பொள்ளாச்சி பகுதியில் ஆற்றில் குளித்துவிட்டு மலுமிச்சம்பட்டியில் உள்ள பாரில் மது அருந்தி உள்ளனர். அப்போது ஜெயக்குமாருக்கும் மது குடிக்க வந்த வெளி நபர்கள் 2 பேருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அதன் பிறகு கலைந்து சென்று விட்டனர். பின்னர் நள்ளிரவு 12:30 மணிக்கு மீண்டும் மறுபடியும் வந்தபோது அங்கு ஏற்கனவே தகராறு செய்த 2 பேரும் நின்று கொண்டிருந்தனர். அப்போது மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஜெயக்குமாரும் அவருடைய நண்பரும் அங்கிருந்து சென்று தனியார் கல்லூரி அருகில் ஒரு பேக்கரி அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது தகராறு செய்தவர்கள்காரில் பின் தொடர்ந்து வந்து மீண்டும் ஜெயக்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .மேலும் அவர்களில் ஒருவர் கத்தியால் ஜெயக்குமாரின் கழுத்தில் சரமரியா குத்தினான் .இதில் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார். படுகாயம் அடைந்த ஜெயக்குமாரை அக்கம் பக்கம்உள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஜெயக்குமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்துதகவல் அறிந்ததும் மதுக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணைநடத்தினர். காரின் பதிவு எண் அடிப்படையிலும் தேடுதல் வேட்டை நடைபெற்றது. இந்த நிலையில் ஜெயக்குமாரை கத்தியால் குத்தி கொலை செய்ததாக தஞ்சாவூர், பாபநாசம் பகுதியைச் சேர்ந்த முகமது ஹாரூன் (வயது 32) கைது செய்யப்பட்டார். இவர் தற்போது கோவை ஆத்து பாலம் பகுதியில் வசித்து வருகிறார். சொந்தமாக கால் டாக்சி வைத்து வாடகைக்கு ஒட்டி வந்தார் .இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக குறிச்சி பகுதியைச் சேர்ந்த விக்கி என்ற விக்ரமன் (வயது 24) என்பவர் கைது செய்யப்பட்டார் .இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.