கண்டித்த மத்திய சிறை அதிகாரியிடம் தகராறு.!!

கோவை மத்திய சிறையில் ஜெயிலராக பணிபுரிந்து வருபவர் சரவணகுமார். இவர் நேற்று மத்திய சிறை பிரதான நுழைவாயில் அருகே ரோந்து சுற்றி வந்தார் அப்போது அங்கு சட்டவிரோதமாக நின்று கொண்டிருந்த 5 விசாரணை கைதிகளை எச்சரித்தார் .அதற்கு அவர்கள் அவரிடம் தகராறு செய்தனர். இது குறித்து ஜெயிலர் சரவணகுமார் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார் .போலீசார் உக்கடம் ,ரோஸ் கார்டன்,அன்பு நகர் அன்சத் மீரான் குட்டி (வயது 39) தெற்கு உக்கடம் ஜாபர் அலி (வயது39 )அப்துல் முனாப் ( வயது 39) கரும்புக்கடை, சதாம் உசேன் (வயது36) சம்சுதீன் (வயது39) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.