2 பேருக்கு அபராதம் விதித்து கோவை மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு.!!

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 65 -ஆவது வார்டு இராமநாதபுரம், முனுசாமி நகரில் டிராக்டரில் வந்து 2 பேர் சாலைஓரம் குப்பைகளை கொட்டினர் .மேலும் அவர்கள் அந்த குப்பைகளை தீயிட்டு எரித்து சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும் வகையில் செயல்பட்டனர் .இதை அங்குள்ள கண்காணிப்பு கேமரா மூலம் மாநகராட்சி அலுவலர்கள் கண்டறிந்தனர். இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சிவகுருபிரபாகரன் உத்தரவின் பேரில் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரித்தனர். இதில் சாலை ஓரம் குப்பைகளை கொட்டி தீ வைத்தது அதே பகுதியைசேர்ந்த விஜய் ,சூர்யா ,என்பது தெரிய வந்தது . இதை யடுத்து அவர்களுக்கு ரூ 10 ஆயிரம்அபராதம் விதிக்கப்பட்டது..