கோவை வ .உ. சி. பூங்காமைதானத்தில் போலீஸ் அதிகாரி தூக்கு போட்டு தற்கொலை

கோவை, புதுக்கோட்டை மாவட்டம் கீரனுரை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது54). இவரது மனைவி கல்யாணி (வயது54). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சொக்கலிங்கம் கோவைப்புதூரில் குடும்பத்துடன் தங்கிருந்து பயங்கரவாத தடுப்பு பிரிவில் சிறப்பு எஸ்.ஐ.யாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சொக்கலிங்கம் வீட்டில் இருந்து தனது மனைவியின் சேலையை எடுத்து கொண்டு வ.உ.சி பூங்கா மைதானத்திற்கு வந்தார். அங்கு உள்ள புங்கை மரத்தில் சேலையால் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது அங்கு ரோந்து சென்ற ரேஸ்கோர்ஸ் போலீஸ்காரர் குமரேசன், சிறப்பு எஸ்ஐ சொக்கலிங்கம் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும், ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் சொக்கலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார், ? பணி சுமையா ? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.. சொக்கலிங்கம் 1997 ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்துள்ளார். கடந்த 2024ம் ஆண்டு பயங்கரவாத தடுப்பு பிரிவில் இன்ஸ்பெக்டருக்கு டிரைவராக நியமிக்கப் பட்டார். அங்கு கடந்த ஒரு ஆண்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீசார் இடையே பெரும் பரப்பரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.