தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த5 பேர் கைது .கோவை ஜூலை 10 தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வர் 19 வயது இளம்பெண். இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் .அந்த மாணவி தூத்துக்குடியில் இருந்த போது சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த செல்வன்(வயது 22) என்பருடன் நட்பாக பழகி வந்துள்ளார்.. ஆனால் அவருக்கு மாணவி மீது ஒரு தலை காதல் ஏற்பட்டது .இதை அறிந்த அந்த மாணவி அவருடன் பேசுவதை தவிர்த்து வந்தார். அதன் பிறகு மாணவி படிப்புக்காக கோவை வந்து விட்டார் .ஆனால் செல்வன் அந்த மாணவியின் தோழிகளை செல்போனில் அழைத்து தன்னிடம் அவரை பேச கூறுமாறு தொல்லை கொடுத்துள்ளார். அதுபோன்று பல்வேறு செல்போன்களில் இருந்து அழைத்து மாணவிக்கு தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் செல்வனின் செல்போன் அழைப்பை மாணவி துண்டித்து வந்தார் .கடந்த 7-ம் தேதி மாணவி சவுரிபாளையம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போதுசெல்வன் தனது நண்பரான சாத்தான்குளத்தைச் சேர்ந்த லிவிங்ஸ்டன்சாமுவேல் ( வயது 24 ) என்பவருடன் அங்கு வந்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரை வற்புறுத்தினார் அதற்கு அந்த மாணவி மறுத்ததால் அவரை இழுத்து ஒரு ஆட்டோவில் ஏற்றி காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜுக்கு கடத்திச் சென்றனர் .அங்கு செல்வனின் நண்பர்களான மேலும் 3 பேர் வந்தனர் .அவர்கள் செல்வனை திருமணம் செய்து கொள்ள மாணவியை கட்டாயப்படுத்தினர். மாணவி மறுத்ததால் அவரைத் தாக்கி அறையில் அடைத்து விட்டு அங்கிருந்து சென்றனர் .சிறிது நேரத்திற்கு பிறகு செல்வன் மட்டும் மது போதையில் மாணவி இருந்த அறைக்கு வந்தார் மீண்டும் மாணவியை துன்புறுத்தி திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தினார். அதன் பிறகு மதுபோதையில் நிதானத்தை இழந்து தூங்கிவிட்டார் .இதை பயன்படுத்தி மாணவி அங்கிருந்து தப்பி சென்றார் .இந்த சம்பவம் குறித்து மாணவி பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வன், லிவிங்ஸ்டன் சாமுவேல், துரைசாமி ( வயது 27) மணிகண்டன் ( வயது23) ரஞ்சித் குமார் ( வயது 26 )ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான 5 பேரும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் .கைதான சாமுவேல் மீது தூத்துக்குடி மாவட்டத்தில் 9 வழக்குகள் மற்றும் துரைசாமி மீது 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0