கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை

கோவை ஆகஸ்ட் 21 தர்மபுரி மாவட்டம் அரூர் பக்கம் உள்ள கச்சேரி மேடு பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த்.இவர் அரூரில் உள்ள தனியார் பைக் ஷோரூம் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் பிரவீன் வயது 21 இவர் கோவை கே.ஜி. சாவடி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சைபர் செக்யூரிட்டிநான்காம் ஆண்டு படித்து வந்தார் .சாவடியில் உள்ள தனியாருக்கு சொந்தமான வீட்டில் நண்பர்களுடன் வசித்து வந்தார் .இவர் தனது பெற்றோருக்கு போன் செய்து தனக்கு மன அழுத்தம் இருப்பதாக கூறியுள்ளார் .இந்த நிலையில் நேற்று அவர்தங்கியிருந்த வீட்டில் தனது முகத்தை துண்டால் மறைத்து விட்டத்தில்லுங்கியை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து அவரது தந்தை பிரசாந்த் கே .ஜி . சாவடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.