கோவை மே 13 விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டி பக்கம் உள்ள சங்கரபாண்டியன் புரத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் . இவரது மகள் சண்முகப்பிரியா ( வயது 21) இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி (கணிதம்) 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கவுண்டம்பாளையத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு செல்வதாக விடுதியில் கூறிவிட்டு சென்றவர் வீட்டிற்கு செல்லவில்லை.கோவை காந்திபுரம் பஸ் நிலையம் வரை வந்தவர் அங்கிருந்து எங்கோ மாயமாகிவிட்டார்.இது குறித்து அவரது தாயார் பொன்குரு பாக்கியம் காட்டூர் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.