கவிஞர் வைரமுத்து மீது சூலூர் போலீசில் புகார்

கோவை ஆகஸ்ட் 11 தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் மாநில இணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார் மாவட்ட இணைச் செயலாளர் கணேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் சூலூர் காவல் நிலையத்தில் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில்அவர்கள் கூறியிருப்பதாவது:- சென்னையில் நடந்த ஒரு விழாவில் கவிஞர் வைரமுத்து இந்துக்கள் வழிபடும் கடவுளான ராமரைகேவலமாக பேசியது எங்களின் மனதை புண்படுத்தி உள்ளது. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.