கோவை மே 8கோவை வழியாக பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் ஏராளமான ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன குறிப்பாக வடமாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் பெரும்பாலான ரெயில்கள் கோவை வந்து தான் செல்கிறது. இவ்வாறு கோவை வழியாக செல்லும் ரெயில்கள் மீது கற்கள் வீசுவது ,தண்டவளத்தின் மீது கற்கள் வைப்பது போன்ற செயல்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இதை தடுக்க ரெயில்வே பாதுகாப்பு படையுடன் சேர்ந்து கோவை ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் இருந்து கோவை வழியாக மேட்டுப்பாளையத்திற்கு செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று அதிகாலை 4:15 மணிக்கு கோவை வந்து கொண்டிருந்தது அந்த ரெயில் கோவை அருகில் உள்ள ஆவராம்பாளையம் ரெயில்வே மேம்பாலம் அருகே வந்த போது அங்கு தண்டவாளத்தில் 2 அடி நீளம,ஒரு அடி அகலம் கொண்ட கான்கிரீட் வைக்கப்பட்டு இருந்தது .அதை பார்த்து என்ஜீன் டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். இருந்த போதிலும் அதன் மீது ரெயில் ஏறி கல் சுக்கு நூறாக நொறுங்கியது. பின்னர் கோவை ரெயில் நிலையம் வந்ததும் அவர் இது குறித்து ரெயில்வே போலீசில் புகார் செய்தார். அதன்பிறகு ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் உபேந்திர குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு 5 பேர் தண்டவாளத்தின்அருகே அமர்ந்திருந்தனர். உடனே போலீசார் அந்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர் .அதில் அவர்கள் தண்டவளம் அருகே அமர்ந்து பேசி கொண்டு இருந்ததாகவும் பின்னர் விளையாட்டுத்தனமாக அந்த பகுதியில் கிடந்த கான்கிரீட் கல்லை எடுத்து தண்டவாளத்தில் வைத்தாகவும் கூறினார்கள் .இதை யடுத்து அந்த 5 பேரையும் கோவை ரெயில்வே போலீசாரிடம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர் .அதில் அவர்கள் 5 பேரும் கோவையில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதாகவும் ,18 வயது நிரம்பாதவர்கள் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.விசாரணையில் அவர்கள் விளையாட்டுத்தனமாக அங்கு கிடந்த கல்லை எடுத்து தண்டவாளத்தில் வைத்து விட்டு வேடிக்கை பார்த்துளதாக தெரிவித்தனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0