என்ஜினியர் வீட்டில் நகை -பணம் – பைக், கொள்ளை.

கோவை செப்டம்பர் 10 கோவை ,பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் ,தனலட்சுமி நகரை சேர்ந்தவர் ஸ்ரீநாத் (வயது 38) என்ஜினியர். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தார். நேற்று திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்றுபார்த்தபோது பீரோவில் இருந்த நகை – பணம் ஆகியவை கொள்ளை யடிக்கப்பட்டு இருந்தது. மேலும் வீட்டிற்கு வெளியே நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளையும் காணவில்லை . மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர். இது குறித்து ஸ்ரீநாத் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்…