விடுதியில் தங்கி படித்த நர்சிங் மாணவி திடீர் மாயம்

கோவை செப்டம்பர் 9. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ,முத்தன் நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கணபதி இவரது மகள் மகாலட்சுமி (வயது 20) இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தார் .கடந்த 4-ந்தேதி இவர் விடுதியில் இருந்து எங்கோ மாயமாகிவிட்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவரது அக்கா திலகவதிபீளமேடுபோலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்..