1200 போதை மாத்திரை -கஞ்சாவுடன் 6பேர் கைது

கோவைசெப்டம்பர் 3கோவையில் கஞ்சா போதை மாத்திரை, குட்கா போன்ற போதை பொருட்கள்அறவே இல்லாது ஒழிப்பதில் மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் தீவிர கவனம்செலுத்தி வருகிறார் .இவைகளை கண்டுபிடிக்க போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில்கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் நேற்று மாலையில் குனியமுத்தூர் பேரூர் மெயின் ரோட்டில் ரோந்துசுற்றி வந்தார். அப்போது அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு கும்பலை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 700 கிராம் கஞ்சா, 1200 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன .இதை யடுத்து 6பேரும் கைது . செய்யப்பட்டனர் விசாரணையில்அவர்கள் குனியமுத்தூர் சுகுணாபுரம், செந்தமிழ் நகரை சேர்ந்த பைசல் ( வயது 30)அப்துல் ரகுமான் (வயது 23) சரண்ராஜ் (வயது 24) பொள்ளாச்சி மலையாண்டிபட்டினம்,கவிநிலவன் (வயது25) குனியமுத்தூர் பிள்ளையார்புரம் நவ்பல் என்ற முகமது நவ்பல் ( வயது 25) சுகுணாபுரம் பிள்ளையார்புரம் ,சர்பிக் அலி (வயது 33) என்பது தெரியவந்தது.இவர்களிடமிருந்து ஒரு செல்போனும் கைப்பற்றப்பட்டது.விசாரணையில் அவர்கள் அந்த பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு இந்த போதை மாத்திரைகளையும் , கஞ்சாவும் விற்பனை செய்தது தெரிய வந்தது. 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.