3 பேர் சிக்கினர். கோவை செப்டம்பர் 6 கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து உள்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும், சிங்கப்பூர், சார்ஜா, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஏராளமான பயணிகள் கோவை விமான நிலையத்துக்கு வந்து செல்கின்றனர் இந்த நிலையில் சிங்கப்பூரிலிருந்து நேற்று முன்தினம் கோவை விமான நிலையத்துக்கு விமானம் ஒன்று வந்தது .அதில் இறங்கிய பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் விமான நிலைய புனனாய்வு அதிகாரிகள் கண்காணித்தினர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த 3 பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் நவீன ஸ்கேன் கருவி மூலம் தீவிர சோதனை செய்தனர் .அதில் ரிமோட் கண்ட்ரோலுடன் இயங்கும் டிரோன்கள் மற்றும் அதனை இயக்குவதற்கு தேவையான பேட்டரி போன்ற சாதனங்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 25 லட்சமாகும் .அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் கடலூரைச் சேர்ந்த பிரபாகரன், திருவாரூரைச் சேர்ந்த அவினாஷ் விழுப்புரத்தைச் சேர்ந்த பரந்தாமன் என்பது தெரியவந்தது இவர்கள் மீது சுங்க துறைசட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0