அதிகாலையில் டாஸ்மாக் பார் -பெட்டிக்கடையில் மது விற்ற 3 ஊழியர் கைது.

கோவை செப்டம்பர் 10 கோவை வெரைட்டி ஹால் ரோடு, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வீரமுத்து, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசுஆகியோர் இன்று அதிகாலையில் காந்தி பார்க் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ( எண் 1740)பாரில் திடீர் சோதனை நடத்தினார்கள்.அப்போது மதுபாட்டில்களை பதுக்கி வைத்துகள்ள சந்தையில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சிவகங்கை மாவட்டம் நாராயண மங்கலத்தைச் சேர்ந்த பிரபாகரன் (வயது 35) பாண்டியன் ( வயது 35) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் பாரில் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர் .இவர்களிடம் இருந்து 53 மது பாட்டில்களும், மது விற்ற பணம் ரூ.3,190பறிமுதல் செய்யப்பட்டது .இதே போல மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நேற்று வைசியாள் வீதியில் உள்ள டாஸ்மாக் கடை ( எண் 17 61)பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.அப்போது அங்குள்ள பெட்டி கடையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்துஅதிக விலைக்கு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த முருகானந்தம் ( வயது 37 )கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 35 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது.