போலீசார் எச்சரிக்கை.கோவை செப்டம்பர் 3 செல்போன் செயலி மூலம் பழகி ஓரின சேர்க்கை ஆசையை தூண்டி பணம் பறித்ததாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் இதுகுறித்து கோவை மாநகரபோலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- கிரிண்டர் உள்ளிட்ட ஒரு சில செயலிகள் மூலம் இளைஞர்கள் கல்லூரி மாணவர்களை குறிவைத்து மர்ம நபர்கள் நட்பாக பேசுகிறார்கள். அப்போது அவர்களிடம் பிரச்சினைகளை கேட்பது போல மனதில் இருக்கும் சபலத்தை தூண்டுகிறார்கள். அதில் சிக்கும் நபர்கள் குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்கிறார்கள். பின்னர் அவர்களிடம் ஓரினச்சேர்க்கை தொடர்பாக பேச தொடங்குகிறார்கள். அதன் பிறகு சம்பந்தப்பட்ட நபரை தனியாக சந்தித்து பேச விரும்புவதாக கூறி குறிப்பிட்ட இடத்திற்கு அழைக்கிறார்கள். அதை நம்பி வரும் நபர்களை ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச் சென்று 5 க்கு மேற்பட்ட நபர்கள் சுற்றி வளைத்துக் கொண்டு மிரட்டி நகை – பணம் செல்போன் ஆகியவற்றை பறிப்பதுடன் ” கூகுள் பே” மூலம் பணத்தையும் பறித்து விடுகிறார்கள் .இது போன்ற சம்பவங்கள் கோவை சரவணம்பட்டி பீளமேடு ஆகிய பகுதிகளில் அடிக்கடி நடந்து வருகிறது. இதில் பாதிக்கப்பட்ட சிலர் போலீசில் புகார் செய்கிறார்கள். ஆனால் பலர் புகார் செய்வதில்லை .இது தொடர்பான புகாரின் பேரில் கோவையில்இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவே இதுபோன்ற செயலியை பயன்படுத்து பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முன்பின் தெரியாத நபர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு தனியாக வருமாறு அழைத்தால் செல்லக்கூடாது. செல்போன் செயலிகளை ஆக்கபூர்வமாக பயன்படுத்தினால் பிரச்சனை ஏற்படாது. எனவே இந்த விஷயத்தில் இளைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள்மற்றும் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0