வால்பாறையில் மான் வேட்டையாடிய நபர் கைது வனத்துறையினர் நடவடிக்கையால் பரபரப்பு

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட கல்யாணப் பந்தல் எஸ்டேட் பகுதியில் மானை வேட்டையாடிய குற்றத்திற்காக கணேஷ் வயது 36 என்பவர் கைது செய்யப்பட்டு அவர் வேட்டையாடி உயிரிழந்த மானை கைப்பற்றி வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மானாம் பள்ளி வனச்சரக அலுவலர் கிரிதரன் தலைமையிலான வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கையால் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது