சவுக்கு சங்கர் மீதான வழக்கு விசாரணை தள்ளி வைப்பு!

கோவை செப்டம்பர் 3 போலீசார் குறித்து யூடியூப்பில் அவதூறாக விமர்சித்து பேசியதாக சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ராஜ் ஆகியோர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தவிர தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட 15 வழக்குகளை தனி வழக்காக கோவை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று இந்த அனைத்து வழக்குகளின் விசாரணை கோவை 4-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி அருண்குமார் ஒரு வழக்கை வருகிற 8-ந்தேதிக்கும் 15 வழக்குகள் கொண்ட மற்றொரு வழக்கை நவம்பர் மாதம் 24-ந் தேதிக்கும் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.