மாணவர்கள் தங்கி உள்ள விடுதிகளில் போலீசார் திடீர் சோதனை!!

கோவை செப்டம்பர் 15போதை பொருள் பயன்பாட்டை தடுக்கும் நோக்கில்
கோவை சரவணம்பட்டி பகுதியில்போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவின் பேரில் துணைகமிஷனர்தேவநாதன் தலைமையில்இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள்.
துடியலூர் ரோடு, சரவணம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் விடுதிகள்,கல்லூரி மாணவர்கள் தங்கி உள்ள அறைகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.. இதில்போதைப் பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. தொடர்ந்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.