போதை மாத்திரைகள் கடத்திய வாலிபர் கைது

கோவை செப்டம்பர் 13 கோவை சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் நேற்று மாலை விமான நிலையம் பின்புறம் உள்ள கருப்பராயன் கோவில் பகுதியில்ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேபடும்படி பைக்கில் வந்து ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அவரிடம்உயர்ரக போதை பொருள் மற்றும் போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைளை பறிமுதல் செய்யப்பட்டன .இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் நீலி கோணாம்பாளையம், என் .கே .ஜி . நகரை சேர்ந்த யாசர் அராபத் ( வயது 23 )என்பது தெரிய வந்தது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.