ரேஷன் கடையில் இருந்து அரிசி கடத்தல்.விற்பனையாளர் பணியிடை நீக்கம்

கோவை செப்டம்பர் 3 கோவை சிங்காநல்லூர் மசக்காளிபாளையம் விஸ்வநாதன் லே-அவுட்டில் கூட்டுறவு பண்டகசாலைக்கு சொந்தமான ஒரு ரேஷன் கடை உள்ளது இங்கு நேற்று மாலையில் ஒருவர் ரேஷன் கடையில் இருந்து சாக்கில் ரேஷன் அரிசியை அடைத்து மொபட்டில் ஏற்றி கடத்த முயன்றார். இதை பார்த்து சிலர் அவர்களிடம் கேட்டபோது கோழி தீவனம் கொண்டு செல்வதாக கூறினார்கள் இது பற்றி தகவல் அறிந்ததும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவுபோலீசார் பொதுமக்களுடன் சேர்ந்து அவர்களை பிடித்தனர்.ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதுஇதை யடுத்து.கடைக்குள் இருந்த அரிசி மூட்டையை பிரித்து தையல் போடும் எந்திரத்தையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கடை விற்பனையாளர் மற்றும் பண்டகசாலை அலுவலகம் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் , கடை விற்பனையாளர்பணியிடை நீக்கம்செய்யப்பட உள்ளதாகவும் அதிகாரிகள்  தெரிவித்தனர்