இதனிடையே, தணிக்கை வாரியத்துக்கு எதிராக ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை தயாரித்த கே.வி.என் புரோடக்சன் நிறுவனம், உயர் நீதிமன்றத்தின் கதவை தட்டியது. நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது ஆஜரான மத்திய அரசின் வழக்கறிஞர், சர்ச்சைக்குரிய 14 காட்சிகளை நீக்குமாறு பரிந்துரைத்திருப்பதாகவும், மறுதணிக்கை குழு படம் பார்த்த பிறகே சென்சார் சான்று வழங்க முடியும் எனவும் தணிக்கை குழு திட்டவட்டமாக தெரிவித்தது.
இதனை கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை ஜனவரி 9ஆம் தேதிக்கு (இன்று) ஒத்தி வைத்தனர். இதனால், ஏற்கனவே அறிவித்தபடி இன்று வெளியாக இருந்த ‘ஜனநாயகன்’ படத்தை கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் தள்ளி வைத்தது. இந்நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில் ஜனநாயகன் படத்துக்கு U/A தணிக்கை சான்றை வழங்குமாறு மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய சென்சார் போர்டின் நடவடிக்கை ரத்து எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது மறு ஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத்தின் நடவடிக்கையை ரத்து செய்தார் நீதிபதி பி.டிஆஷா.








